சிறுமிக்கு ரகசிய திருமணம் – கர்ப்பத்தால் கைதான கல்லூரி மாணவர்

சென்னையை அடுத்த திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை சிறுமியின் உறவுக்கார இளைஞரான கல்லூரி மாணவர் விக்ரம் என்பவர் காதலித்திருக்கிறார். சிறுமியுடன் விக்ரம் சந்தோஷமாக இருந்திருக்கிறார். அதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார்.

இந்த தகவல் இரண்டு குடும்பத்தினருக்கும் தெரிந்ததும் சிறுமியை ரகசியமாக விக்ரமுக்கு திருமணம் செய்து வைத்தனர். விக்ரம், திருநின்றவூர் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி படித்து வருகிறான்.

இந்தச் சூழலில் சில தினங்களுக்கு முன் திடீரென வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. உடனே சிறுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர்.

அப்போது சிறுமி, கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதைக்கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக சிறுமி கர்ப்பமாக இருக்கும் தகவலை ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் லதா, சிறுமி, விக்ரம், அவர்களின் குடும்பத்தினரிடம் விசாரித்தனர. பின்னர் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விக்ரம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *