கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து

நாடு முழுவதும் வரும் செப்டம்பருக்குள் கல்லூரி செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது. இதை எதிர்த்து பல்வேறு மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.


இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி அதிரடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


கலை, அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப பட்டப்படிப்பு, இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படுகிறது.


இதேபோல முதுகலை பட்டப்படிப்பு, முதுகலை பொறியியல் பட்டப்படிப்பில் முதல் ஆண்டு மாணவர்களுக்கு இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. அடுத்த கல்வியாண்டுக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதுதொடர்பான அதிகாரபூர்வ உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *