இன்ஸ்ட்ராகிராம் மூலம் இளம்பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய ஜெர்மனி மாணவன் – ராமநாதபுரத்தில் வைரலான ஆபாச போட்டோஸ்கள்

ராமநாதபுரத்தில் இளம்பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து அதன்மூலம் அவர்களை நிர்வாணமாக வீடியோக்களை எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம்

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பியின் செல்போன் நம்பருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண் ஒருவர், தனக்கு திருமணமாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன் சமூகவலைதளம் மூலம் தனக்கு சிலர் அறிமுகமாகினர். அதில் ஒருவன் என்னுடன் போனில் பேசிவந்தான். அன்பாகவும் ஆறுதலாகவும் பேசி வந்த அவனை முழுமையாக நம்பினேன்.

ஒருநாள் வீடியோ காலில் பேசும் போது அவன் கூறியது போல நானும் செய்தேன். அப்போது அவன் என்னுடைய வீடியோவை இன்னொரு செல்போனில் படம் பிடித்துள்ளான். அந்தப் போட்டோவை எனக்கு அனுப்பியபோது நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் அவன் கூறியதைப் போல நானும் செய்தேன். என்னுடைய தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் அவனிடம் சிக்கிக் கொண்டதால் பயத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

அந்தப் பெண்ணை ஆடைகள் இல்லாமல் வீடியோவில் பேசும்படி மிரட்டுவார்கள். அந்த வீடியோவை வைத்து பணத்தை மிரட்டி பறிப்பார்கள். அந்தக் கும்பலின் கூகுள்பே, பேடீம், மற்றும் போன்பே போன்ற செயலி மூலம் நடந்த பணப்பரிவர்த்தனை செல்போன் நம்பர்களை கொண்டு விசாரித்து 6 பேர் கும்பல் குறித்த தகவல்களை சேகரித்துள்ளோம்.

போலீஸ்

ஆபாச போட்டோஸ்

இந்தச் சமயத்தில் என்னுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு என்னுடைய தனிப்பட்ட போட்டோஸ்கள் வந்திருந்தன. அதைப்பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் என்னிடம் போனில் பேசிய ஒருவன், உன்னுடைய போட்டோஸ், வீடியோக்கள் எங்களிடம் உள்ளது. நாங்கள் கேட்கும் தொகையை கொடுத்துவிட்டால் பிரச்சினையில்லை. இல்லை என்றால் உன்னுடைய போட்டோஸ்களை சமூகவலைதளத்திலும் கணவருக்கும் அனுப்பி அசிங்கப்படுத்திவிடுவேன் என்று மிரட்டினான்.

அதனால் அவன் கேட்ட 7.50 லட்சம் ரூபாயை கொடுத்தேன். ஆனாலும் அந்தக் கும்பல் தொடர்ந்து என்னை மிரட்டியது. அந்தக் கும்பலின் மிரட்டல் எல்லை மீறி விட்டது. என்னைப் போல ஏராளமான பெண்கள் அந்தக் கும்பலிடம் சிக்கி தவிக்கிறது என்று கண்ணீர்மல்க கூறினார்.

ராமநாதபுரம் எஸ்.பி.

பெண்ணின் கதையைக் கேட்ட எஸ்.பி, கவலைப்படாதீங்க, ரகசியமாக உங்களின் புகாரை விசாரிக்க சொல்கிறேன் என்று கூறியதோடு அந்தப் பெண் கொடுத்த சமூகவலைதள விவரங்கள் மற்றும் கும்பல் குறித்த தகவல்கள் ஆகியவற்றை சைபர் க்ரைம் போலீசாரிடம் விசாரிக்க உத்தரவிட்டார். சைபர் க்ரைம் போலீசார் விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

ஜெர்மனியில் படித்துவரும் கீழக்கரையைச் சேர்ந்த மாணவன் ஒருவன்தான் இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டதை போலீசார் கண்டறிந்தனர். ஜெர்மன் மாணவனின் கூட்டாளிகளை குறித்த விவரங்களைசேகரித்த போலீசார் கூண்டோடு பிடிக்க வியூகம் அமைத்தனர்.

ஜெர்மனி மாணவர்

ஜெர்மனியில் படித்துவரும் அந்த மாணவன், பல பெயர்களில் இன்ஸ்ட்ராகிராம், முகநூல், ட்விட்டர் என போலி ஐடிக்களை வைத்திருந்தான். அதன் மூலம் சமூகவலைதளங்களில் படங்களை பதிவிடும் பெண்களின் போட்டோஸ்களை மார்பிங் செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நண்பர்கள் மூலம் அனுப்பி மிரட்டச் சொல்வார்.

அதற்கு பயப்படும் பெண்களுடன் தவறாக நடந்துக் கொண்டு அதையும் வீடியோ, போட்டோஸ்களாக அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் எடுத்து மிரட்டி பணம் பறிப்பதே இந்தக் கும்பலுக்கு வேலையாக இருந்துள்ளது. ஜெர்மனி மாணவன் கும்பலிடம் ஏராளமான பெண்கள் சிக்கி கோடிகணக்கில் பணத்தை இழந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

6 பேர் கும்பல்

இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் கூறுகையில், “சமூகவலைத்தளங்கள் மூலம் பெண்களுடன் பழகும் இந்தக் கும்பல் முதலில் நட்பாக பழகுவார்கள், பின்னர், மார்பிங் செய்த ஆபாச புகைப்படங்களை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.

அதை வைத்தே அந்தப் பெண்ணை ஆடைகள் இல்லாமல் வீடியோவில் பேசும்படி மிரட்டுவார்கள். அந்த வீடியோவை வைத்து பணத்தை மிரட்டி பறிப்பார்கள். அந்தக் கும்பலின் கூகுள்பே, பேடீம், மற்றும் போன்பே போன்ற செயலி மூலம் நடந்த பணப்பரிவர்த்தனை செல்போன் நம்பர்களை கொண்டு விசாரித்து 6 பேர் கும்பல் குறித்த தகவல்களை சேகரித்துள்ளோம்.

நெல்லை ஜாசம் கனி

100-க்கும் மேற்பட்ட பெண்கள்

கீழக்கரையை சேர்ந்த முகமதுமைதீன்தான் இந்த பிளாக் மெயில் கும்பலுக்கு மூளையாகச் செயல்பட்டு வந்துள்ளான். ஜெர்மனி நாட்டில் தங்கி படித்து வரும் முகமதுமைதீன், ராமநாதபுரத்தில் இருப்பது போல போலியான கணக்கு தொடங்கி வசதியான வீட்டு பெண்கள் இன்ஸ்டாகிராமில் வலைவிரித்து வீழ்த்தியுள்ளான்.

இவனின் நண்பர்களான சென்னை பாசித் அலி, புதுச்சேரி முகம்மது இப்ரஹிம் நூர், நெல்லை ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசூல், நாகப்பட்டினம் முகம்மது ஜாசிம் ஆகியோரும் பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர். அந்தப்பணத்தில் சந்தோஷமாகவும் ஆடம்பரமாகவும் வாழ்ந்துவந்துள்ளனர். இந்தக் கும்பலிடம் 100க்கும் மேற்பட்ட பெண்கள் சிக்கியுள்ளனர்.

கீழக்கரை பார்டு பைசூல்

தைரியமாக புகார் அளிக்கலாம்


நெல்லை ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசூல் ஆகியோரை கைது செய்துள்ளோம். அவர்கள் இருவரும் அளித்த தகவலின்படி மற்றவர்களைத் தேடிவருகிறோம். ஜெர்மனியில் தங்கியிருக்கும் முகமது மைதீன்கானை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் இந்தக் கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக காவல்கண்காணிப்பாளர் வருண்குமாரின் 9489919722 என்ற நம்பருக்கு புகாரளிக்கலாம்” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *