சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஷேர் ஆட்டோக்களில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பஸ் சேவைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இரவில் பஸ்கள் முழுமையாக ஓடவில்லை. இதன்காரணமாக ஷேர் ஆட்டோக்களில் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் சமானிய பொதுமக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.