சென்னையில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் சாம்பிராணி புகைப் போடும் ஒருவர், இளம்பெண்ரிஹானா பேகத்தின் வீட்டு கதவை தட்டியிருக்கிறார். கதவை திறந்த ரிஹானாவிடம், உன் கணவருக்கு தோஷம் இருக்கிறது. அதனால் பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதை உண்மையென நம்பிய அவரிடம், தாலிச் செயினையும் கழற்றிக் கொடு என்று கேட்டு வாங்கியவர், மணகுவளைக்குள் அதைப்போட்டு மந்திரங்களைச் சொல்லியிருக்கிறார்.

மண் குவளை மீது சாம்பிராணி புகையை போட்ட சமயத்தில் அதிலிருந்த தாலிச் செயினை எடுத்துக் கொண்டவர், மண் குவளையை ரிஹானாவிடம் கொடுத்துவிட்டு ஒரு மணி நேரத்துக்குப்பிறகு திறந்து பார் என்று தெரிவித்தவர், பூஜைக்காக 300 ரூபாயையும் வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

மண் குவளையை திறந்து பார்த்தபோது அதற்குள் எலும்மிச்சை பழங்கள், கயிறுகள், பேப்பர் மட்டுமே இருந்தன. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரிஹானா ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் இன்று புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தாலிச் செயினைப் பறித்துச் சென்றவரை தேடிவருகின்றனர்.

Follow us on :

Tamil Nirubar YouTube Channel : https://www.youtube.com/channel/UCUJKEellp__cXrCcVBtXMeg
Tamil Nirubar Twitter : https://twitter.com/TNirubar
Tamil Nirubar Facebook : https://www.facebook.com/tamil.nirubar.37/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *