இரவு 10 மணி வரை கடைகள் திறந்திருக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
“கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த மாதம் முதல் அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளன. இந்த பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டு எடுக்கவும் தமிழக அரசு ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அளிக்கிறது.
இதன்படி தமிழகம் முழுவதும் காய்கறி கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள், வணிக வளாகங்கள் அக். 22 முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
எனினும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது, 6 அடி தனிமனித இடைவெளியை பொதுமக்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.