மே 6 முதல் காய்கறி, மளிகை கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மே 6-ம் தேதி முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு, தனியார் அலுவலங்கள் 50 % ஊழியர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும். பயணிகள் ரயில், அரசு, தனியார் பஸ்களில் 50% இருக்கைகளில் மட்டும் அமர்ந்து பயணம் செய்யலாம்.
தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு கடை, காய்கறி, டீக் கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கலாம். மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற கடைகள் வழக்கம்போல செயல்படலாம். உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும். பெட்ரோல் நிலையங்கல் வழக்கம்போல செயல்படும்.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் ஸ்விக்கி, சோமட்டோ போன்ற உணவு விநியோக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும் பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் மட்டுமே செயல்படும்.