அட்டைப்படத்தில் ஸ்ருதிஹாசன்

நடிகர் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். கடந்த 2000-ம் ஆண்டில் ஹே ராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தந்தை கமலஹாசனின் உன்னை போல ஒருவன் திரைப்படத்தின் இசைமைப்பாளராகவும் அவதாரமெடுத்தார்.


பன்முகத் திறமை கொண்ட அவர், பிரபல ஜே.எப்.டபிள்யூ. இதழின் அட்டை படத்துக்கு பிரத்யேகமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. ஜே.எப்.டபிள்யூ. அட்டைப்படத்தை, நடிகை ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *