தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு கடந்த 9-ம் தேதி தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதையொட்டி ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டு தோட்டத்தில் அவர் மரக்கன்று நட்டார். அத்தோடு ஜூனியர் என்டிஆர், நடிகர் விஜய், நடிகை ஸ்ருதி ஹாசனுக்கும் அழைப்பு விடுத்தார்.
பசுமை உலகத்தை படைக்க என்னோடு இணையுங்கள் என்று மகேஷ் பாபு கேட்டுக் கொண்டார். இதை ஏற்று நடிகர் விஜய் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது வீட்டில் மரக்கன்று நட்டார்.
இதைத் தொடர்ந்து நடிகை ஸ்ருதிஹாசன் தனது வீட்டில் மரக்கன்றை நட்டு ட்விட்டரில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார். அதோடு நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், ராணா, நடிகை தமன்னா மரக்கன்று நட அழைப்பு விடுத்துள்ளார்.
இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஸ்ருதி, அடுத்த ஆண்டு எட்ஜ் என்ற இசை ஆல்பத்தை வெளியிடுகிறார். இந்த ஆல்பத்தின் ஒரு பாடலை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த பாடலின் உச்ச தொனி, மென்மையான தொனி என இருவிதங்களில் பாடல்களை பாடி வெளியிட்டிருக்கிறார். அவரது பாடலுக்கு வரவேற்பு அமோகமாக உள்ளது.