முதுநிலை சித்தா, ஹோமியோபதி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

முதுநிலை சித்தா, ஹோமியோபதி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, ஆத்தூரில் உள்ள ஒயிட் மெமோரியல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளில்முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், அரசு சித்தா மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை சித்தா படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை www.tnhealth.gov.in  இணையத்தில் நவ. 23 முதல் 27 வரை பதிவிறக்கம் செய்யலாம். வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *