சித்தி சீரியலின் தொடர்ச்சியாக சித்தி 2 சீரியல் கடந்த ஜனவரி 27 முதல் சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ராதிகா, அவரது கணவராக பொன்வண்ணன் மற்றும் பெரும் சின்னத்திரை நட்சத்திரங்கள் நடித்து வந்தனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த மார்ச் இறுதி முதல் படப்பிடிப்பு நடத்தப்படவில்லை.
சன் டிவி உள்பட அனைத்து சேனல்களிலும் சீரியல்களின் பழைய காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. சித்தி 2 சீரியல் மட்டும் பழைய காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக ராதிகா, சிவகுமார் நடித்த பழைய சித்தி சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதலில் இரவில் ஒளிபரப்பான சித்தி, தற்போது காலையில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சித்தி 2 சீரியலின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் பல்வேறு புதிய முகங்கள் அறிமுகமாகி உள்ளன. பொன் வண்ணனுக்குப் பதிலாக நிழல்கள் ரவி அறிமுகமாகிறார். இதேபோல மேலும் பல்வேறு நடிகர், நடிகைகள் மாற்றப்பட்டுள்ளனர்.
சீரியலின் புதிய படப்பிடிப்பு புகைப்படத்தை நடிகை ராதிகா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், சித்தி 2 படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. உடல்நல பிரச்சினை காரமமாக சில நடிகர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நடிகர், நடிகைகளின் உடல் நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.