நடிகை சிம்ரன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகின் கனவு கன்னியாக வலம் வந்தவர் சிம்ரன். தற்போது வரை பல்வேறு குணசித்திர வேடங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மும்பையில் வசித்து வரும் சிம்ரன் கடந்த 5-ம் தேதி முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு தனது கருத்தையும் அழுத்தமாக கூறியிருக்கிறார்.
“பல்வேறு வகையான நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர் விரும்புகின்றனர். இந்த சிறந்த வழி தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான். நான் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டேன். நீங்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்” என்று சிம்ரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடிகர் அருண் விஜயும் சென்னையில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒட்டுமொத்த உலகமும் இருள் காலத்தை எதிர்கொம்டிருக்கிறது. இந்த நேரத்தில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்” என்று அருண் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.