கொரோனா கொலைவெறி அடங்காதா.. ஒரேநாளில் 50,000 பேருக்கு தொற்று.. 705 பேர் பலி

நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 49 ஆயிரத்து 931 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக புதிய வைரஸ் தொற்று 50 ஆயிரத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸின் கொலைவெறியும் இதுவரை அடங்கவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 705 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.


ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 35 ஆயிரத்து 453 ஆக உயர்ந்துள்ளது. ஆறுதல் அளிக்கும் விதமாக 9 லட்சத்து 17 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 லட்சத்து 85 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 32 ஆயிரத்து 771 ஆக உயர்ந்திருக்கிறது.

டெல்லியில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் அங்குள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாகி வருகின்றன.
டெல்லியில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் அங்குள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாகி வருகின்றன.


மாநில வாரியான பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 13 ஆயிரத்து 656 பேர் உயிர்பலியாகி உள்ளனர்.
இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் ஒரு லட்ச்தது 56 ஆயிரம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 53 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 3 ஆயிரத்து 494 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. எனினும் அந்த மாநிலத்தில் புதிய வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் நாளொன்றுக்கு புதிதாக 10 ஆயிரம் பேருக்கும், தமிழகத்தில் 7 ஆயிரம் பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது.

உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் கொரோனா பரிசோனைக்காக காத்திருக்கும் மக்கள்
உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் கொரோனா பரிசோனைக்காக காத்திருக்கும் மக்கள்

ஆனால் டெல்லியில் நாளொன்றுக்கு ஆயிரம் பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று ஏற்படுகிறது.
குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. டெல்லியில் இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 875 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

11 ஆயிரத்து 904 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் புதிய வைரஸ் தொற்று 5 ஆயிரத்தை தாண்டி வருகிறது. வடமாநிலங்களில் உத்தர பிரதேசம், மேற்குவங்கத்தில் வைரஸ் தொற்று கணிசமாக உயர்ந்து வருகிறது. அனைத்து மாநில அரசுகளும் டெல்லியை முன்னுதாரணமாகக் கொண்டு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *