குட்டி..குட்டி..செய்திகள்…

குட்டி..குட்டி..செய்திகள்… தொகுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 1,806 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 1,383 துணை சுகாதார நிலையங்கள், 423 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன.

இந்நிலையில் மருத்துவ வசதி இல்லாத பகுதிகளில் புதிதாக 2,000 மினி கிளினீக்குகளை தொடங்கும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த கிளினீக்கில் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு உதவியாளர் இருப்பர். காலை முதல் மாலை வரை இயங்கும். மினி கிளினீக்கில் கொரோனை பரிசோதனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

முதியவர்களுக்கான ரயில் கட்டண சலுகை ரத்து

கடந்த 7-ம் தேதி முதல் தமிழகத்தில் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களில் முதியவர்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கு எப்போதும்போல சலுகைகள் வழங்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை நிறுத்திவைப்பு

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்து பரிசோதனை நடத்தி வருகிறது. இந்த தடுப்பூசி சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பரிசோதிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி செலுத்திய சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து உலகளாவிய அளவில் ஆக்ஸ்போட்டின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஹலோ போலீஸ் சேவை

திருவள்ளூர் மாவட்டத்தில் ஹலோ போலீஸ் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை, மணல் கொள்ளை, போலி மதுபான விற்பனை, செம்மர கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் குறித்து 90033 90050 என்ற செல்போன் எண் மற்றும் வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்.

இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும். புகார் அளிப்பவரின் பெயர், விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

குப்பை சேகரிக்க 1,500 பேட்டரி வாகனம்

சென்னை மாநகராட்சியில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 7 மண்டலங்களில் ஸ்பெயினை சேர்ந்த தனியார் நிறுவனம் துப்புரவு பணிகளை மேற்கொள்ள உள்ளது.

இந்த நிறுவனம், குப்பை சேகரிக்க 1,500 பேட்டரி வாகனங்களை பயன்படுத்த உள்ளது. 6 மணி நேரம் சார்ஜ் செய்தால் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு பேட்டரி வாகனத்தை ஓட்டிச் செல்லலாம்.

குட்டி..குட்டி..செய்திகள்… தொகுப்பு இத்துடன் நிறைவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *