அரசு பள்ளி மாணவர்களுக்கு 80,000 ஸ்மார்ட் போன்கள் வழங்க திட்டம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 80,000 ஸ்மார்ட் போன்கள் வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கப்படவில்லை. தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆன்லைன் வாயிலாக பாடங்களை நடத்தி வருகின்றன. இதற்கு ஸ்மார்ட்போன் அவசியமாகும்.

அரசு பள்ளி மாணவர்கள் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதால் பெரும்பாலான மாணவ, மாணவியரிடம் ஸ்மார்ட் போன் இல்லை. இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக  பாடம் கற்பிக்கப்படுகிறது. 

இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

“தமிழக அரசு சார்பில் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கிராமப்புற மாணவர்களுக்கு இ பாக்ஸ் நிறுவனம் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு பள்ளிகளில் 7,600 ஸ்மார்ட் வகுப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் 80,000 ஸ்மார்ட்போன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *