நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு கடந்த புதன்கிழமை இரவு 7.50 மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாராக இருந்தது. 7-வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் எஸ் 1 பெட்டியில் பாம்பு இருப்பதை பார்த்த பயணிகள், அலறியபடி கீழே இறங்கினர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பெட்டியை சோதனையிட்டபோது 3 அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பு இருப்பது தெரிய வந்தது. அந்த பாம்பு பிடிக்கப்பட்ட பிறகு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *