தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டார். சினேகா-பிரசன்னா தம்பதிக்கு முதலில் ஆண் குழந்தை பிறந்தது. கடந்த ஜனவரி இறுதியில் அவருக்கு 2-வது பெண் குழந்தை பிறந்தது.
நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராமில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், இது கடினமான காலம். நிச்சயம் நமக்கு நல்ல எதிர்காலம் உண்டு. உடல், மன நலனை பேணுங்கள். கஷ்ட காலம் கடந்து போகும் என்று நம்பிக்கையூட்டியுள்ளார்.
இந்த பதிவுடன் அவர் வீடியோவையும் இணைத்துள்ளார். அதில் சினேகா தீவிரமாக உடற்பயிற்சி செய்கிறார். அவரது மூத்த மகன் குடுகுடுவென்று ஓடுகிறார். இளைய மகள் கியூட்டாக தரையில் படுத்திருக்கிறார். நல்லதொரு குடும்பம்..பல்கலைக்கழகம். மக்களுக்கு நம்பிக்கையூட்டியதற்கு நன்றி.