ஆவடி தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் சமூக சேவகி விருப்ப மனு

சட்டமன்ற தேர்தலில் ஆவடி மற்றும் துறைமுகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட சமூக சேவகி ராவுத் பஷரிதாராபாய் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்தையில் அ.தி.மு.க, தி.மு.க ஆகியவை ஈடுபட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியிலிருந்த சமகவும் தி.மு.க கூட்டணியிலிருந்த ஐஜேகே-வும் விலகி புதிய கூட்டணி அமைத்திருப்பதாக சமகவின் தலைவர் சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.

ஆவடி தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் சமூக சேவகி தாராபாய்
நலத்திட்ட உதவிகளை வழங்கும் சமூக சேவகி தாராபாய்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனை இன்று சரத்குமார் சந்தித்து பேசியிருக்கிறார். இவ்வாறு தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஆவடி, துறைமுகம் தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட ஆவடியைச் சேர்ந்த சமூக சேவகி தாராபாய் விருப்ப மனு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் கொடுத்துள்ளார்.

பின்னர் அவர் கூறுகையில், நான் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். குறிப்பாக திருச்சி, திண்டுக்கல், அரவக்குறிச்சி, கரூர், நாமக்கல், சென்னை ஆகிய இடங்களில் கிராமப்புற பெண்களின் வளர்ச்சிக்காக சேவை செய்திருக்கிறேன். சிறந்த சமூக சேவகி விருதும் எனக்கு கிடைத்திருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தேன். ஆனால் எனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தொடர்ந்து அ.தி.மு.க சார்பில் பல்வேறு கட்சி பணிகளையும் நலத்தி ட்ட உதவிகளையும் செய்து வருகிறேன்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளில் சமூக சேவகி தாராபாய்
ஜெயலலிதாவின் பிறந்தநாளில் சமூக சேவகி தாராபாய்

புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ஆவடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். இந்தத் தடவை ஆவடி அல்லது துறைமுகம் தொகுதியில் போட்டியிட எனக்கு கட்சித் தலைமை வாய்ப்பு அளிக்கும் என நம்புகிறேன். எனக்கு புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மாவை ரொம்ப பிடிக்கும். எனக்கு தமிழ்நாடு முழுவதும் சேவைகள் செய்த அனுபவங்கள் இருக்கின்றன. என் உயிருள்ளவரை விசுவாசியாக இருப்பேன். தொடர்ந்து கட்சி பணி, சமூக பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்வேன் என்றார்.

தாராபாய் சார்பில் ஆவடியில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவுக்கு வார்டு செயலாளர் குப்பன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் சிவராமமூர்த்தி முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் ஆர்.சி.டி தீனதயாளன், தாராபாய் ஆகியோர் சிறப்புரையாற்றி மதிய உணவு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட் டஉதவிகளை வழங்கினர். அம்மா பேரவை ஆனந்தன் நன்றியுரை வழங்கினார்.

ஆவடி தொகுதிக்கு அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், சமூகசேவகி தாராபாய் உள்ளிட்ட கட்சியினர் விருப்ப மனுதாக்கல் செய்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *