இந்தியாவில் சூரிய கிரகணம்

இந்த ஆண்டுக்கான சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. ஆண்டுதோறும் நடக்கும் சூரிய கிரகணம், நிலா சூரிய ஒளியை மறைத்து உலகம் முழுவதும் நிழல் தரும் நிகழ்வைத்தான் நாம் சூரிய கிரகணம் என்ப்போம்.

இந்த வருடாந்திர சூரிய கிரகணம், இன்று 1:42 மணிக்கு தெரிந்தது. ஆனால் இதை இந்தியாவில் சில இடங்களில் மட்டும்தான் பார்க்க முடிந்தது. அதிலும் சூரிய கிரகனத்தை பகுதியாகத்தான் காண முடிந்தது.

லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இந்த அரிய வானியல் நிகழ்வைக் கண்டு களித்தனர். நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சூரிய கிரகணம் 12:25 மணிக்கு தொடங்கி மாலை 6.41 மணி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *