வீடுகளுக்கே சென்று மின் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மின்வாரியம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
மின் வாரிய அலுவலகங்கள், அரசு இ-சேவை மையங்கள், தபால் நிலையங்கள், இணையதளம், செல்போன் செயலி வாயிலாக மின் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து கணக்கெடுக்க ஊழியர்கள் வரும்போதே மின் கட்டணம் செலுத்தும் புதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி மின் வாரிய ஊழியர்களுக்கு பாயின்ட் ஆப் சேல் கருவி வழங்கப்படும். பொதுமக்கள் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் மின் கட்டணத்தை செலுத்தலாம் என்று மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.