பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.கடந்த 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமானது.
உயிர் காக்கும் கருவிகளுடன் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் மயக்கத்தில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார்.
இதுகுறித்து எஸ்பிபி மகன் எஸ்.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனிப்பட்ட ஐசியூவுக்கு அப்பா மாற்றப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
டாக்டர்களை அடையாளம் கண்டு தம்ப்ஸ் அப் காட்டுகிறார். முன்பைவிட நன்றாக மூச்சுவிடுகிறார், அம்மாவும் குணமடைந்து வருகிறார். ஓரிரு நாளில் அம்மா வீடு திரும்புவார். அப்பாவும் விரைவில் வீடு திரும்புவார்” என்று தெரிவித்துள்ளார்.