தீபாவளிக்கு 2,000 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 14-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இந்த ஆண்டு கொரோனா வைரஸால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையால் சிறப்பு பஸ்களின் எண்ணிக்கையை குறைக்கு போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
இதன்படி வரும் தீபாவளிக்கு 2,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.