நாளை முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம்

நாளை முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளியை ஒட்டி நவம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 14,757 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அண்மையில் அறிவித்தார்.  

இதன்படி மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையம், தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் முனையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் புறப்பட உள்ளன.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் செல்லும் பஸ்கள் கே.கே. நகர் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பஸ்கள் தாம்பரம் சானிடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, நெய்வேலி, கடலூர், சிதம்பரம், புதுச்சேரி செல்லும் பஸ்கல் தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

நாகை, மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, சேலம், கோவை செல்லும் பஸ்கள் கோயம்பேடு பஸ் முனையத்தில் இருந்து புறப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *