மின்னணு வாக்காளர் அட்டை.. மார்ச் 13, 14-ல் சிறப்பு முகாம்… நடைபெறுகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டது. இதில் 31 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தபால் மூலம் வாக்காளர் அடையாள அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. எனினும் பலருக்கு வாக்காளர் அட்டை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள், மின்னணு அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் மார்ச் 13, 14-ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த முகாமில், முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை அவரவர் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.