பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில்வே சார்பில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரயில் பயணத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக ரயில்வே பாதுகாப்பு படை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புறநகர் ரயில் சேவையின் இரவு நேர ரயில்களில் மகளிர் பெட்டிகளில் ரயில்வே போலீஸார் உடன் செல்கின்றனர்.
இந்நிலையில் ரயில் பயணத்தில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ‘எனது தோழி’ என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின்போது பெண்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் 182 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ரயில்வே போலீஸார் உடனடியாக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.