மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பு சேர்க்கையில் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.

இதுதொடர்பான மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அனைத்து எம்எல்ஏக்களின் ஆதரவுடன் சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவின்படி அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அவர்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் பயன்பெற முடியும்.

மேலும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்து அதன்பின் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியருக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு சலுகை வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *