பிரிமியம் சிறப்பு ரயில் கட்டணத்தில் 20% சலுகை வழங்கப்பட்டுள்ளது.
ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ சிறப்பு ரயில்களில் ஏசி சேர் கார், ஏசி மூன்றடுக்கு பெட்டிகளில் பயணம் செய்ய 4 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்வோருக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
இந்த ரயில்களில் 60 சதவீதம் வரை இடம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் அடிப்படை கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை வழங்கப்படும்.
70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.
முன்பதிவு 80 சதவீதத்துக்கு மேல் செய்யப்பட்டிருந்தால் கட்டண தள்ளுபடி வழங்கப்படாது என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.