தமிழக சிறப்பு ரயில்கள் ரத்து

தமிழகத்துக்குள் திருச்சி-செங்கல்பட்டு, மதுரை-விழுப்புரம், கோவை-காட்பாடி, திருச்சி-மயிலாடுதுறை, கோவை-அரக்கோணம், கோவை-மயிலாடுதுறை, திருச்சி-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்துக்குள் இயக்கப்பட்டு வரும் இந்த சிறப்பு ரயில்களை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.


இதையேற்று வரும் 31-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *