புதுச்சேரி, மைசூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து புதுச்சேரி, மைசூருக்கு தினசரி ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 10.15 மணிக்கு புதுச்சேரி சென்றடையும். மறுமார்க்கத்தில் புதுச்சேரியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் காலை 9.30 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
இதேபோல சென்ட்ரலில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.40 மணிக்கு மைசூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் மைசூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் காலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.