ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆதரவற்றோருக்காக தனி வார்டு

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆதரவற்றோருக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆதரவற்றோர் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பது இல்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

மக்களின் கோரிக்கையை ஏற்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆதரவற்றோருக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெற்று குணமடைபவர்களை மாற்றுத் திறனாளிகள் நல ஆணைய இல்லத்தில் ஏற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

இங்கு சிகிச்சை பெறுவோருக்கு தனியார் அமைப்புகள் அடல்ட் டயபர் உள்ளிட்டவற்றை வழங்கி உதவி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *