எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. இதுதொடர்பான வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு கடந்த வியாழக்கிழமை வழக்கை விசாரித்தது. அப்போது ஐகோர்ட் பதிவுத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
“சிறப்பு நீதிமன்றங்களில் நீதிபதி பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன. சிறப்பு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டில் 2 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று பதிவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.