முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்று கொண்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றியது. திமுக மட்டும் 125 இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பெற்றது.

இதைத் தொடர்ந்து ஏற்கெனவே திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை காலை தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய பதவியேற்பு விழாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட்டன. புதிய சுகாதாரத் துறை அமைச்சராக சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் அவரது நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமைச்சரவையில் 15 புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *