திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு

திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக மு,க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர் வரும் 7-ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2-ம் தேதி எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில்  திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 133 பேர் வெற்றி பெற்றனர். இதில் 8 பேர் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.-க்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவ திமுக தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  நாளை அவர் ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அப்போது எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கடிதத்தை வழங்க இருக்கிறார். இதைத் தொடர்ந்து 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில் தமிழகத்தின் புதிய முதல்வராக ஸ்டாலின் பதவியேற்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *