கணினி வழியில் ஓட்டுநர் பயிற்சி

கணினி வழியில் ஓட்டுநர் பயிற்சி வழங்கும் திட்டத்தை தமிழக போக்குவரத்துத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் நேரிடுகின்றன. இதில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பலியாகின்றனர். தமிழகத்தில் கடந்த ஓராம்டில் 57 ஆயிரத்து 728 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 10 ஆயிரத்து 525 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்துகளை குறைக்க ஓட்டுநர் உரிமம் பெற வருவோருக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கும் விதமாக 11 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கணினி உதவியுடன் ஓட்டுநர் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

முதல்கட்டமாக சென்னை மீனம்பாக்கம், தாம்பரம், சோழிங்கநல்லூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு ஆகிய 11 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சிமுலேட்டர் மையங்கள் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  அடுத்த 6 மாதங்களில் இந்த சிமுலேட்டர் மையங்கள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மையங்கள் மூலம் ஒரு வாகனத்தை சாலையில் ஓட்டிச் செல்லும்போது எதிர்கொள்ள வேண்டிய சவால்களை அறிந்து செயல்பட வேண்டிய முறைகள் குறித்து கணினி திரை மூலம் எளிமையாக பயிற்சி அளிக்கப்படும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *