ஆன்லைனில் ஆப்பிள் வாட்சுக்கு பதிலாக கற்கள்

ஆன்லைனில் ஆப்பிள் வாட்சுக்கு பதிலாக கற்கள் அனுப்பப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் வேதா’, ‘கைதி’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் சாம்.சி.எஸ். இவர் ஃபிளிப்கார்டில் ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்தார்.

ஆன்லைனில் ஆப்பிள் வாட்சுக்கு பதிலாக அனுப்பப்பட்ட கற்கள்.
ஆன்லைனில் ஆப்பிள் வாட்சுக்கு பதிலாக அனுப்பப்பட்ட கற்கள்.

அண்மையில் அவருக்கு பார்சல் விநியோகம் செய்யப்பட்டது. இதை திறந்து பார்த்தபோது ஆப்பிள் வாட்சுக்கு பதிலாக கற்கள் இருந்தன.
இதுகுறித்து இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் ட்விட்டரில் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.

“என் சகோதரரின் பிறந்தநாளுக்கு பரிசாக கொடுக்க பிளிப்கார்டில் ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்திருந்தேன். ஆர்டர் கைக்கு கிடைத்து திறந்து பார்த்தபோது அதிர்ச்சியானேன்.

அதில் கற்களை மிக அழகாக பேக் செய்து அனுப்பியிருந்தார்கள். இதுகுறித்து ஃபிளிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் தெரிவித்தபோது எங்களின் புகாரை நிராகரித்து பணத்தைத் திருப்பித் தரமுடியாது என்றனர். பிளிப் கார்டில் பொருட்களை வாங்காதீர்கள். அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *