சத்துணவு பொருள் கிடைக்காத மாணவர்கள் தொலைபேசியில் புகார் அளிக்கலாம்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. சத்துணவு திட்ட மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் அரிசி, பருப்பு வழங்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி தற்போது மாதந்தோறும் 10 முட்டைகளும் வழங்கப்படுகின்றன.
சில பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு சத்துணவு திட்டத்தில் அரிசி, பருப்பு, முட்டை கிடைக்கவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் 1800 425 8971 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம். அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகள் திறக்கப்படும் வரை ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு திட்ட மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் அரிசி, பருப்பு, 10 முட்டைகள் வழங்கப்படும் என்று சமூக நலத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.