கடந்த 2017-ம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அழகு சீரியல் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நடிகை ரேவதி, தலைவாசல் விஜய், நடிகை ஸ்ருதி ராஜ், வி.ஜே.சங்கீதா உள்ளிட்டோர் இந்த சீரியலில் நடித்தனர். நாள்தோறும் மாலையில் ஒளிபரப்பப்படும் இந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல சன் டிவியில் மதிய நேரம் ஒளிபரப்பாகி வந்த சாக்லேட், தமிழ்ச்செல்வி ஆகிய சீரியல்களும் நிறுத்தப்பட்டுள்ளன. விஷன் டைம் இன்டியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் வெளியான இந்த சீரியல்கள் நிறுத்தப்படுவது குறித்து அந்த நிறுவன வட்டாரங்களிடம் விசாரித்தபோது, கொரோனா வைரஸை காரணம் காட்டினர்.
இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அவர்களை அழைத்து வருவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே குறிப்பிட்ட சீரியல்களை நிறுத்த சன் டிவியும் விஷன் டைம் இன்டியா பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் முடிவு செய்துள்ளன. சன் டிவியில் 5-க்கும் மேற்பட்ட புதிய சீரியல்கள் தொடங்கப்பட உள்ளன.
அழகு சீரியல் நிறுத்தப்படுவது குறித்து அந்த சீரியலில் சுதா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஸ்ருதி ராஜ் வீடியோ மூலம் வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். அவரது வீடியோ இதோ…