சன் டிவி சீரியலின் நாகமோகினி யார்?

சன் டிவியில் 4 சீரியல்கள் நிறுத்தப்பட உள்ளன. அதற்குப் பதிலாக புதிய சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. அதில் ஒன்று நாக மோகினி, இந்த சீரியல் வரும் 27-ம் தேதி முதல் நாள்தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று சன் டிவியில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.


இது தங்கல் டிவியில் ஒளிபரப்பான இந்தி சீரியலின் மொழிமாற்ற சீரியலாகும். “பாசத்துக்கு முன் இவள் பனி, பகைக்கு முன் இவள் நாக மோகினி” என்று கடந்த சில நாட்களாக சன் டிவியில் இவர் மிரட்டி கொண்டிருக்கிறார்.
இவர் யார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.

இவரது பெயர் நிகிதா சர்மா. டெல்லியில் பிறந்த இவர் கடந்த 2008-ம் ஆண்டில் மிஸ் ஏர் ஹோஸ்டஸ் அகாடமி விருதினை வென்றார். இந்திய இளவரசி அழகி பட்டத்தையும் வென்றுள்ளார்.


கோககோலா, டிவிஎஸ் ஸ்கூட்டி, லேஸ் உள்ளிட்ட பல்வேறு விளம்பரங்களில் மாடலாக நடித்துள்ளார். கல்யாண் ஜூவல்லரி விளம்பரத்தில் நடிகர் பிரபுவுடன் இணைந்தும் நடித்திருக்கிறார்.


கடந்த 2012-ம் ஆண்டு முதல் இந்தி சீரியல்களின் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். அவரே நாகமோகினியாக தமிழில் கால் தடம் பதிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *