ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது.


கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்த மாதத்தின் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வற்ற ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.


3-வது ஞாயிற்றுக்கிழமையும் தளர்வற்ற முழுஊரடங்கு அமல் செய்யப்படுகிறது. இதன்படி தமிழகம் முழுவதும் காய்கறி, மளிகை கடைகள் செயல்படாது. மருந்தகங்கள் மட்டுமே செயல்படும்.


முழுஊரடங்கு என்பதால் சனிக்கிழமை கடைகளில் கூட்டம் அலைமோதியது. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *