கேரளாவில் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
“கேரளாவில் விளையும் 16 வகையான காய்கறிகளுக்கான விலையை மாநில அரசே நிர்யணம் செய்யும். நாட்டில் முதல்முறையாக அமல் செய்யப்படும் இத்திட்டத்தால் விவசாயிகள் பயன் அடைவார்கள்.
சந்தைகளில் காய்கறிகளின் விலை குறைந்தாலும்கூட அதற்கு கூடுதலான விலையில் விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் கொள்முதல் செய்யப்படும். விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்யவும் விற்பனை செய்யவும் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்த திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள் கேரள அரசின் வேளாண்மை துறை இணையதளத்தில் நவம்பர் 1-ம் தேதி முதல் பதிவு செய்யலாம்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.