தேர்தல் பத்திர விற்பனைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்தால் போலி நிறுவனங்கள் வாயிலாக கட்சிகளுக்கு சட்டவிரோதமாக நிதி அளிப்பது அதிகரித்தும். எனவே தேர்தல் பத்திர விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்ற மத்திய அரசின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட், மனுவை தள்ளுபடி செய்தது.