நீதிபதிகளின் கருத்துகளை செய்தியாக்க ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது

நீதிபதிகளின் கருத்துகளை செய்தியாக்க ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் தேர்தல் நடத்தியதற்காக இந்திய தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம்கூட சுமத்தலாம் என்று சென்னை ஐகோர்ட் குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டை எதிர்த்தும், நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துகலை ஊடகங்களில் செய்தியாக வெளியிட தடை விதிக்க கோரியும் தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வு கடந்த வியாழக்கிழமை விசாரித்தது. “நீதிபதிகளின் கருத்துகளை செய்தியாக்க ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது. அரசியல் சாசன அமைப்புகள் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம்கூட சுமத்தலாம் என்று ஐகோர்ட் நீதிபதிகள் வாய்மொழியாக தெரிவித்த கருத்து தீர்ப்பில் இடம்பெறவில்லை. இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்தது கிடையாது. தள்ளுபடி செய்கிறோம்” என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *