திருமணமாகாத ஆண், பெண் ஒன்றாக வாழ்ந்து உறவு கொள்வதை பலாத்காரமாக கருத முடியாது

திருமணமாகாத ஆண், பெண் ஒன்றாக வாழ்ந்து உறவு கொள்வதை பலாத்காரமாக கருத முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

கால் சென்டரில் பணியாற்றும் இளைஞரும், இளம்பெண்ணும் 5 ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர். அந்த இளைஞர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருடன் சேர்ந்து வாழ்ந்த பெண், பலாத்கார புகார் அளித்தார்.

இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியன் அமர்வு விசாரித்து வருகிறது. 

“திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளிப்பது தவறு. எனினும் பல ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழும் ஜோடி விருப்பத்துடன் உறவு கொள்வதை பலாத்காரமாக கருத முடியாது. குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை 8 வாரங்களுக்கு கைது செய்யக்கூடாது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *