தமிழகத்தில் தங்கத்தை காசாக்கிய ஸ்வப்னா- அம்மணிக்கு கத்தாரிலும் ஒரு கணவர் இருக்கிறாராம்

கடந்த 5-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் ஒரு பார்சல் வந்தது. அங்குள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு பார்சல் அனுப்பப்பட்டிருந்தது. வெயிட்டான அந்த பார்சலில் வில்லங்கம் இருப்பது சுங்கத் துறை அதிகாரிகள் மோப்பம் பிடித்தனர்.


எக்ஸ்ரே பரிசோதனையில் பார்சலில் உலோகம் இருப்பது தெள்ள தெளிவாகத் தெரிந்தது. ஆனால் தூதரக அதிகாரிகள், பார்சலில் பேரிச்சம் பழம் இருக்கிறது என்று கூறி போக்கு காட்டினர். அரசு உயரதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் தரப்பில் இருந்து தொலைபேசியில் அழுத்தங்கள் அதிகரித்தன.

என்ஐஏ அதிகாரிகள் பிடியில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ்

இந்த வில்லங்க விவகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு சென்றது. அதன்பிறகு காட்சிகள் மாறின. ஐக்கிய அரபு அமீரக டெல்லி தூதரக அதிகாரிகள் முன்னிலையில் பார்சல் திறக்கப்பட்டது. அதற்குள் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது.


ஐக்கிய அரபு தூதரக முன்னாள் ஊழியரும் கேரள அரசின் தகவல் தொழில் நுட்ப துறை அலுவலருமான ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து பல விக்கெட்டுகள் விழுந்தன. இதில் ஒருவர் ரமீஸ். இவர் ஒரு எம்.பி.யின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது.

தங்க கடத்தல் வழக்கை விசாரிக்கும் என்ஐஏ அதிகாரிகள், ரமீஸிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் பல உண்மைகளை கக்கியுள்ளார்.
“ஸ்வப்னா அண்ட் கோ, ஐக்கிய அரபு அமீரக தூதரக போர்வையில் துபாயில் இருந்து பலமுறை தங்கத்தை கடத்தியுள்ளனர். இந்த தங்கத்தை தமிழகத்தின் திருச்சி, மகாராஷ்டிராவின் சங்லி நகரங்களில் விற்று காசாக்கினர்.


ஸ்வப்னா ஏற்கெனவே 2 முறை அதிகாரபூர்வமாக திருமணம் செய்துள்ளார். முதல் கணவர் மூலம் ஒரு மகளும், இரண்டாவது கணவர் மூலம் ஒரு மகனும் உள்ளனர். கத்தாரில் ஸ்வப்னா தங்கியிருந்தபோது அங்கு முஸ்லிம் முறைப்படி 3-வதாக ஒருவரை திருமணம் செய்தார். அங்கும் அவருக்கு கணவர் இருக்கிறார்” என்று ரமீஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.


இதனிடையே ஸ்வப்னாவுடன் நெருக்கமாக இருந்த கேரள முதல்வரின் முன்னாள் செயலாளர் சிவசங்கரனிடம் மீண்டும் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *