தூய்மை பணியாளர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களின் துப்பரவு பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த மண்டலங்களில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இந்த விவகாரத்தால் பல்வேறு மண்டலங்களில் துப்புரவு பணியாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் புழல் 23-வது வார்டில் 23 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். கடந்த 27-ம் தேதி காலை தூய்மை பணியாளர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட சென்றபோது சிலரின் பெயர்கள் இல்லை. இந்த பிரச்சினை தொடர்பாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் மண்டல அலுவலகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.