தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவின் இன்னொரு முகம்

தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவின் ரகசியங்கள்

தமிழக டிஜிபி

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தமிழகத்தைச் சேர்ந்த சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரின் பயோடேட்டா எல்லோருக்கும் தெரியும்.

இளையதலைமுறையினரின் ரோல் மாடலாக வலம் வரும் சைலேந்திரபாபு ஐபிஎஸிக்கு இன்னொரு முகமும் உண்டு. அந்த முகம் பலருக்குத் தெரியாது. அதுகுறித்து இந்த வீடியோவில் பார்ப்பதற்கு முன் சைலேந்திரபாபு குறித்த சின்ன பிளாஸ்பேக்கை காணலாம்.

சைலேந்திரபாபு குறித்த பிளாஸ்பேக்கை

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் 1962-ம் ஆண்டு ஜூன் மாதம் 5- ம் தேதி பிறந்த சைலேந்திரபாபு, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அரசு உயர்நிலை பள்ளியில் படித்தவர்.

தமிழக டிஜிபி
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு

1987-ம் ஆண்டு தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியானார். தன்னுடைய 25 -வது வயதில் இளமை துடிப்புடன் கூடிய ஐபிஎஸ் அதிகாரியான சைலேந்திரபாபு, பயிற்சிக்கு பிறகு கோபிச் செட்டிப்பாளையத்தில் ஏஎஸ்பியாக பணியைத் தொடங்கினார்.

அப்போதிலிருந்தே அவரின் அதிரடி தொடங்கிவிட்டது. கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தில் எஸ்பி, சென்னை அடையாறு துணை கமிஷனர், 2 மாநில காவல்துறைக்கு சவால்விட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக பணியாற்றினார்.

சைலேந்திரபாபுவின் அதிரடி

சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனராகப் பணியாற்றிய போது 2004- ம் ஆண்டு கட்டப்பஞ்சாயத்து, ரௌடி சாம்ராஜ்ஜியத்தில் கொடிக்கட்டிப்பறந்த தாதாக்கள் ‘காட்டான்’ சுப்பிரமணி, ‘கேட்’ ராஜேந்திரன், ‘பூங்காவனம்’ ராமமூர்த்தி, ‘மாட்டு’ சேகர், ‘டைசன்’ சேகர், ‘பாக்சர்’ வடிவேல் போன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தவர்.

2010ம் ஆண்டு நவம்பர் மாதம் கோவை மாநகர போலீஸ் கமிஷனராகப் பணியாற்றிய போது பள்ளிச் சிறுவர்களை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மோகனகிருஷ்ணனைக் என்கவுன்டரில் சுடப்பட்டார்.

தமிழக டிஜிபி
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு

கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபியாக பணியாற்றியபோது. 2015 ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் சூழ்ந்த போது தாம்பரம், பள்ளிக்கரணை, போரூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டார்.

சிறைத்துறை தலைவராக சைலேந்திரபாபு பணியாற்றியபோது சிறைக்கைதிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் மாரத்தான் ஓட்டப்பந்தயம், கைதிகளுக்கு வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.

தீயணைப்புத்துறையில் டிஜிபியாக கூடுதல் பொறுப்பில் இருந்த போது அந்தத் துறையின் வளர்ச்சிக்காக பல நடவடிக்கை எடுத்தார். ரயில்வே காவல்துறை டிஜிபியாக பணியாற்றியபோது பல குற்ற வழக்குகளை திறம்பட துப்பு துலக்கினார்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு

சைலேந்திரபாபு, குடியரசுத்தலைவர் பதக்கம், உயிர்காப்பு நடவடிக்கைக்காக பாரதப் பிரதமரின் பதக்கம், சந்தன கடத்தல் வீரப்பன் அதிரடிப்படையில் பணியாற்றி வீரதீர செயல்கள் ஆற்றியதற்காக முதல்வர் பதக்கம் ஆகியவற்றை பெற்றியிருக்கிறார்.

இவர் எழுதிய நூல்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸாக வேண்டும் என லட்சியத்தோடு இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டியாக உள்ளன. காவல்துறை பணியை தவிர்த்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர்.

ஹெல்த் தொடர்பாக டிப்ஸ்களை வீடியோவாக வெளியிட்டு சமூகவலைதளத்தில் அதிக ரசிகர்களையும் பாலோவர்ஸ்களையும் வைத்திருப்பவர்.

இப்படி சைலேந்திரபாபு ஐபிஎஸ் குறித்து பல தகவல்கள் சமூகவலைதளங்களில் கொட்டி கிடந்தாலும் அவரைப் பற்றி தெரியாத சில விஷயங்களையும் தெரிந்து கொள்வோம்.

சைலேந்திரபாபுவை பற்றி தெரியாத விஷயங்கள்

தமிழக டிஜிபி

சைலேந்திரபாபுவின் சொந்த ஊரில் பழைமையான ஓட்டு வீடு இன்னும் அப்படியே இருக்கிறது. அங்குதான் அவரின் அம்மா, 95 வயதாகும் ரத்தினம்மாள் வசித்து வருகிறார். சைலேந்திரபாபுவுடன் கூட பிறந்தவர்கள் எட்டுபேர்.

ஒரு சகோதரியைத் தவிர மற்றவர்கள் அரசு ஊழியர்கள். இன்னமும் சைலேந்திரபாபு, தான்படித்த பள்ளிக்கு வந்து அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுடன் சகஜமாக உரையாடுவார்.

அவருக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் மீது சைலேந்திரபாபு மிகுந்த மதிப்பும் மரியாதை வைத்திருப்பார்.

அதோடு தான்படித்த பள்ளிகளில் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கும் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கும் தங்க நாணயம் கொடுத்து சைலேந்திரபாபு பாராட்டி வருகிறார்.

பள்ளியில் படிக்கும்போது என்சிசி கேப்டனாகவும் ஸ்கூல் லீடாராகவும் சைலேந்திரபாபு இருந்திருக்கிறார். சைலேந்திரபாபுவின் வயது 60ஐ நெருங்கிக் கொண்டிருக்கும்போதுகூட இன்னமும் இளைஞர் போல துடிப்புடன் அவர் செயல்பட்டு வருகிறார்.

தமிழக டிஜிபி

அதற்கு அவரின் உணவு பழக்கமும் உடற்பயிற்சியும்தான் முக்கிய காரணம். . சைக்கிளிங் செல்வது, சைலேந்திரபாபுக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று. அதனால்தான் அவரை சைக்கிள் காதலன் என்று சொல்லலாம்.

சைலேந்திரபாபுவை குறித்து ஒன்று சொல்ல வேண்டும் என்றால் துணிந்து செயல்படக்கூடியவர். தெளிவான முடிவை எடுப்பவர் என்பது அவருடன் பழகியவர்களுக்கு தெரியும்.

அவர் அடிக்கடி மாணவர்களுடன் உரையாடும்போது நானும் உங்களைப் போல கடைசி பெஞ்ச் மாணவன்தான். ஆனால் இன்று இந்தநிலைமைக்கு இருப்பதற்கு எனக்காக பாதையை நானே உருவாக்கிக் கொண்டேன் என்று குறிப்பிடுவார்.

இன்று காவல்துறையில் தலைமைப் பதவியிலிருக்கும் சைலேந்திரபாபு, தமிழக மக்களுக்கு அரணாகவும் இருந்துவருகிறார்.

காவல்துறையினருக்கும் மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு ரோல் மாடலாகவும் இருக்கும் தமிழக ஐபிஎஸ் அதிகாரிதான் நம்ம சைலேந்திரபாபு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *