தி.நகரில் பிரபல துணிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 18-ம் தேதி தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடையில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு நடத்தினர். அப்போது கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடை நிர்வாகம் பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
“இது வணிக நிறுவனங்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும். விழாக்காலங்களில் வணிக நிறுவனங்கள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்” ெந்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.