டாப்ஸி படத்துக்கு ‘கொரோனா இன்சூரன்ஸ்’

பாலிவுட்டின் முன்னணி நடிகை டாப்ஸி பன்னு. இவர் தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


தற்போது லூப் லாபடா என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வைரஸ் அச்சுறுத்தல் நீங்காத நிலையில் துணிச்சலாக மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.


முன்னெச்சரிக்கையாக இந்த படத்துக்கு கொரோனா இன்சூரன்ஸ் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து தயாரிப்பாளர் அதுல் கூறும்போது, “படப்பிடிப்பின்போது யாருக்காவது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் படப்பிடிப்பு நிறுத்தப்படும். 2 வாரங்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த காலத்துக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்கும் வகையில் பாலிசி எடுக்க உள்ளோம். இந்தியாவில் முதல்முறையாக திரைப்படத்துக்கு கொரோனா இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது நாங்கள்தான்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *