டாம்கோ கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகமான டாம்கோ சார்பில் தனி நபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான கடன், கல்வி கடன் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டில் முஸ்லிம், கிறிஸ்தவர், புத்த மதத்தினர், பாரசீகர், ஜெயின் சிறுபான்மையினருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. http://www.chennai.nic.in இணையத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் அல்லது நகர மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள், அதன் கிளை வங்கிகளில் சமர்ப்பிக்கலாம். சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் கூடுதல் பதிவாளர் அலுவலகத்திலும் விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *