கோயில் குடமுழுக்கில் தமிழ் கட்டாயம் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரி சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் ரமேஷ் என்ற இளஞ்செழியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அண்மையில் விசாரித்தனர்.
“இனிவரும் காலங்களில் கோயில் குடமுழுக்கின்போது தமிழ் மொழி கட்டாயம் இடம் பெற வேண்டும். இதுபோன்ற வழக்குகள் மீண்டும் தாக்கலானால் கோயில் நிர்வாகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்” என்று நீதிபதிகள் கண்டிப்புடன் உத்தரவிட்டனர்.